கொரோனா தடுப்பூசியில் விளையாடும் மத்திய அரசு – ராகுல் காந்தி சாடல்!

367

புதுடெல்லி (09 ஏப் 2021): நாட்டில் அதிகரித்து வரும் கோவிட் வழக்குகளை கருத்தில் கொண்டும் அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி கிடைக்க வகை செய்யும் வகையிலும் தடுப்பூசி ஏற்றுமதியை நிறுத்தவேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், நாட்டில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்படுவதாக வரும் தகவல்கள் கவலையளிக்கின்றன. ஒருபுறம் கோவிட் வழக்குகள் அதிகரித்தபடி உள்ளன. இந்நிலையில் இவ்விவகாரத்தில் மத்திய அரசு மெத்தனமாக இருப்பதை விட்டு உடனடியாக கோவிட் தடுப்பூசி ஏற்றுமதியை நிறுத்துவதோடு, அனைத்து மாநிலங்களுக்கும் தட்டுப்பாடின்றி தடுப்பூசி கிடைக்க வழி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதைப் படிச்சீங்களா?:  அதிமுகவிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி நீக்கம் - போஸ்டரால் பரபரப்பு!

முன்னதாக ராகுல் மத்திய அரசின் மோசமான நிர்வாகம் அலட்சியம் குறித்து கவலை தெரிவித்த ராகுல் காந்தி, .ஆறு கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகளை நாடு ஏற்றுமதி செய்துள்ளது” என்று அவர் கூறியிருந்தார்..