நடிகர் ரஜினிக்கு ஜமாத்துல் உலமா சபை கடிதம்!

Share this News:

சென்னை (28 பிப் 2020): நடிகர் ரஜினியை சந்தித்து பேச ஜமாத்துல் உலமா சபை முடிவு செய்துள்ளதாகவும் அதற்காக அவரை சந்திக்கும் விதமாக கடிதம் எழுதியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினி, சிஏஏவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிறார். இது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ‘தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை‘ யின் பொதுச்செயலாளர் அன்வர் பாதுஷாஹ் உலவி, ரஜினிகாந்துக்கு ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறார்.

அந்த கடிதத்தில் ரஜினியின் கருத்துகள் அதிருப்தி அளிப்பதாகவும், பெரும்பான்மை மக்களின் கருத்துக்களில் உள்ள நியாயத்தை அவர் புரிந்துகொள்ளவில்லை என்றும் சுட்டிக்காட்டிவிட்டு, ‘’போராட்டக்காரர்களின் கருத்துக்களை அவர் கேட்க வேண்டும். ஜனநாயகரீதியாக போராடுகிற மக்களை ரஜினிகாந்த் தொடர்ந்து அவமதித்து வருகிறார் என்கிற பழியிலிருந்து அவர் விடுபட வேண்டும். அவரை சந்தித்து விளக்கமளிக்க உலமா சபை திட்டமிட்டுள்ளது‘’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், உலமா சபையின் துணை தலைவர் இலியாஸ், நேற்று இரவு ரஜினியை தொடர்புக்கொண்டு பேசியிருக்கிறார். அப்போது, ‘’உங்கள் கடிதத்தைப் பார்த்தேன். மகிழ்ச்சியாக இருந்தது. உங்களின் கருத்துக்கள் நியாயமானதுதான்’’ என அவர் சொல்ல, ‘’மத குருமார்கள் பலரும் உங்களை சந்தித்து பேச வேண்டும் என விரும்புகிறோம்‘’ என்று சொல்ல, ’’நிச்சயம் சந்திப்போம்’’ என்று உறுதி தந்திருக்கிறார் ரஜினி.


Share this News:

Leave a Reply