காங்கிரஸ் தலைவர் காலில் விழுந்த ரஜினி!

Share this News:

சென்னை (17 மார்ச் 2020): சென்னையில் விழா ஒன்றில் காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனின் காலில் விழுந்து ரஜினிகாந்த் ஆசி வாங்கியுள்ளார்.

கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் ரசிகர்களைச் சந்தித்துப் புகைப்படம் எடுத்துக்கொண்ட ரஜினி, தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும், போர் வரும் போது களம் காணுவோம் எனவும் அறிவித்தார்.

எனினும் அவர் எப்போது கட்சி தொடங்குவார் என பரவலாக எதிர்பார்ப்புகள் இருந்து வரும் நிலையில், சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் செய்தியாளர் சந்திப்பை ரஜினிகாந்த் சில தினங்களுக்கு முன்னர் நிகழ்த்தினார். அப்போது, அப்போது, மூன்று முக்கிய முடிவுகளையும் அவர் அறிவித்தார். அதில் முக்கியமானது தனக்கு முதல்வராகும் ஆசை இல்லை. அதனால் கட்சி தலைமை வேறாகவும், ஆட்சி வேறாகவும் இருக்கும் என ரஜினி கூறியதுதான். முதல்வர் பதவியை விட்டுக்கொடுத்து தியாகம் செய்வது போன்று அரசியல் செய்யவில்லை. இது நான் ஏற்கனவே கூறியதுதான் எனவும் ரஜினி அப்போது சுட்டிக்காட்டினார்.

மேலும் தன் கட்சியில் தேவையில்லாத பதவிகள் இருக்காது என கூறிய ரஜினி, “தொண்டர்கள் வருங்கால முதல்வர் என்று என்னை சொல்ல வேண்டாம். நான் அரசியலுக்கு வருவதாக மூளை முடுக்கெல்லாம் மக்களிடம் போய் சொல்லுங்கள். மக்கள் எழுச்சி வெடிக்க வேண்டும். அதன்பின்னர் நான் அரசியலுக்கு வருகிறேன்” என பெரிய குண்டை தூக்கிப்போட்டார்.

இந்நிலையில், சென்னையில் நடைபெற்று வரும் சாணக்கியா யூடியூப் சேனல் விருது வழங்கும் விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். விழாவில் பேசிய ரஜினி, அரசியலில் நேரம் தான் சரியாக வேலை செய்யும். அரசியலில் ஒரு அலை. ஒரு மூவ்மெண்ட் வரவேண்டும் என்றார்.

எம் ஜி.ஆர் கணக்கு கேட்டதால் வெளியே தூக்கி எறியப்பட்டார். அவர் மக்களிடம் சென்று விளக்கம் கேட்டார். மக்கள் ஆதரவு அலையால் வெற்றி பெற்றார் எனவும் அப்போது சுட்டிக்காட்டி மீண்டும் ஒருமுறை திமுகவை சீண்டியுள்ளார். இதற்கு முன்னர், துக்ளக் விழாவில் கலந்து கொண்ட ரஜினிகாந்த், முரசொலி வைத்திருந்தால் திமுக காரன் என்று சொல்வார்கள். துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்று சொல்வார்கள் என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனிடையே, விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனின் காலில் விழுந்து ரஜினிகாந்த் ஆசி வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply