ரஜினியின் ரத்த அழுத்தம் குறையவில்லை – டிஸ்சார்ஜ் செய்வதில் தாமதம்!

Share this News:

ஐதராபாத் (26 டிச 2020): ரஜினியின் ரத்த அழுத்தம் குறையாததால் ரஜினியை டிஸ்சார்ஜ் செய்வது குறித்து நாளை காலை முடிவெடுப்பதாக ஐதராபாத் அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாய் அடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. அப்போது ரஜினிக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது. ஆனாலும், சென்னை திரும்பாமல் ஐதராபாத்தில் ரஜினிகாந்த் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

இந்நிலையில், நேற்று ரஜினிக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டதால் ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் ரஜினிகாந்தின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஐதராபாத் அப்பல்லோ மருத்துவமனையின் இன்றைய காலை புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ரத்த அழுத்தம் இன்னும் குறையாததால் இன்றும் மருத்துவமனையில் ரஜினிகாந்த் ஓய்வில் இருக்க வேண்டும் என்றும், டிஸ்சார்ஜ் பற்றி நாளை காலை முடிவெடுக்கப்படும் என்றும் இன்று மாலை தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply