வைரலாகும் ரஜினியின் புதிய திடீர் வைரல் வீடியோ!

621

சென்னை (01 ஜன 2021): நடிகர் ரஜினிகாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அப்பல்லோ மருத்துவமனைக்கு உரிய வீடியோவாக உள்ளது. அது தற்போது வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் நடிகர் ரஜினிகாந்த் தான் அனுமதிக்கப்பட்ட அப்போலோ நிர்வாகக் குழுவினருக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். மேலும் அதில் “கடவுள் அருளால் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன். உங்கள் சேவை மிகவும் சிறப்பானதாக இருந்தது” என்று கூறியதோடு மருத்துவர்களுக்கும் ஊழியர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகளைக் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளைக் கூறியிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இதைப் படிச்சீங்களா?:  கீழக்கரை திமுக கவுன்சிலர் போதைப்பொருள் கடத்தவில்லை - சுங்கத்துறை அதிகாரிகள் தகவல்!