ரஜினி டிஸ்சார்ஜ் – கட்சி நிர்வாகிகளை சந்திக்க வாய்ப்பில்லை!

Share this News:

சென்னை (27 டிச 2020): நடிகர் ரஜினி இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார். இந்த தகவலை ரஜினிகாந்தின் அண்ணன் சத்திய நாராயணன் உறுதி செய்தார்

நடிகர் ரஜினிகாந்த் ஐதராபாத்தில் நடந்த ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் பங்கேற்று இருந்த போது படப்பிடிப்பு குழுவில் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இந்தநிலையில் திடீரென ரஜினிகாந்த் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டது. ரத்த அழுத்தத்தில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோவில் சி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதனை ஏற்று ரஜினிகாந்த் கடந்த 3 நாட்களாக ஆஸ்பத்திரியிலேயே சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையடுத்து ரஜினிகாந்த் இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார். இந்த தகவலை ரஜினிகாந்தின் அண்ணன் சத்திய நாராயணன் உறுதி செய்தார். இதுதொடர்பாக அவர் கூறும்போது, ‘‘ரஜினிகாந்த் இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டால், இரவிலோ அல்லது நாளையோ சென்னை திரும்புவார்’’ என கூறியுள்ளார்.

சென்னை திரும்பிய பிறகு ரஜினிகாந்த் வீட்டிலேயே ஓய்வு எடுக்க முடிவு செய்துள்ளார். கட்சி நிர்வாகிகள் யாரையும் நேரில் சந்திக்காமல் போனிலேயே சில நாட்கள் ஆலோசனை நடத்த அவர் திட்டமிட்டுள்ளார்.

வருகிற 31-ந் தேதி புதிய கட்சியை தொடங்குவதற்கான தேதியை ரஜினிகாந்த் வெளியிட உள்ளார். அதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. ஆனால் ரஜினியின் உடல் நிலையை பொறுத்தே மற்ற முடிவுகள் எடுக்கப் படலாம் எனபதால் திட்டமிட்டபடி கட்சி தொடங்கப்படுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.


Share this News:

Leave a Reply