சென்னைக்கு ஆபத்து – பகீர் கிளப்பும் ராமதாஸ்!

501

சென்னை (06 ஆக 2020): “சென்னையிலுள்ள கிடங்கு ஒன்றில் வைக்கப்பட்டுள்ள அமோனியம் நைட்ரேட்டால் வெடி விபத்து ஏற்படும் ஆபத்து உள்ளது” என்று, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

“சென்னை துறைமுகத்தை ஒட்டிய கிடங்கு ஒன்றில் 740 டன் அமோனியம் நைட்ரேட் எனும் வெடிமருந்து 5 ஆண்டுகளாக இருப்பு வைக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. லெபனான் நாட்டின் மிகப்பெரிய வெடிவிபத்து ஏற்பட்டதற்கு இந்த வெடிமருந்து தான் காரணமாகும்!

இதைப் படிச்சீங்களா?:  ஒரு கார்பரேட் கம்பெணி தமிழகத்தை ஆளுகிறது - எடப்பாடி பழனிச்சாமி!

சென்னை கிடங்கில் உள்ள அமோனியம் நைட்ரேட்டால் அதேபோன்ற வெடிவிபத்து ஏற்படும் ஆபத்து உள்ளது. அதைத் தடுக்க சென்னை கிடங்கில் உள்ள அமோனியம் நைட்ரேட் வெடிமருந்தை பாதுகாப்பாக அப்புறப்படுத்தி, உரம் தயாரிப்பு போன்ற பிற தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்!”

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்