நியாய விலை கடைகளில் பொருட்கள் வாங்க புதிய திட்டம்!

சென்னை (18 நவ 2022): நியாய விலை கடைகளில் கருவிழி அடையாளம் மூலம் பொருட்கள் வழங்கும் திட்டம் விரைவில் கொண்டு வரப்பட உள்ளது என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டத்தில் 69-வது இந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு, 1,262 பயனாளிகளுக்கு அமைச்சர் சக்கரபாணி கடனுதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், ”தமிழகத்தில் இனி அமைக்கப்படும் நியாய விலைக்கடைகளில் கட்டாயம் கழிவறை அமைக்கப்படும் என்றார்.
நியாய விலை கடைக்கு வருவோர் காத்திருக்க வேண்டிய சூழலில், அதனை பயன்படுத்திக் கொள்ளலாம்” என்று அமைச்சர் கூறியுள்ளார்.

மேலும், ”கருவிழி அடையாளத்தை பயன்படுத்தி பொருட்கள் வழங்கும் திட்டம் சோதனை முறையில் துவங்கியுள்ளோம். விரைவில் அனைத்து நியாய விலை கடைகளிலும் இந்த முறை அமலுக்கு கொண்டுவரப்படும்” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

ஹாட் நியூஸ்:

பட்டுக்கோட்டை வாலிபர் வெளிநாட்டில் மரணம்!

பட்டுக்கோட்டை (03 பிப் 2023): வெளிநாட்டிற்கு வேலை செய்வதற்காக சென்ற பட்டுக்கோட்டை வாலிபர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். பட்டுக்கோட்டை அடுத்த கொண்டிகுளம் சர்க்கார்தோப்பு பகுதியை சேர்ந்த செல்வம் - கனகாம்பாள் தம்பதியரின் இளைய மகன்...

பத்திரிகையாளர் சித்தீக் கப்பன் ஜாமீனில் விடுதலை!

புதுடெல்லி (02 பிப் 2023): கேரள பத்திரிகையாளர் சித்திக் கப்பன் 2 ஆண்டுகளுக்கு பிறகு ஜாமீனில் விடுதலை ஆனார். 2020ம் ஆண்டு உத்திர பிரதேசம் ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து செய்தி சேகரிக்க...

முஹம்மது நபியை இழிவு படுத்தியவர்களுக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்!

போபால் (30 ஜன 2023): முஹம்மது நபியை இழிவு படுத்தும் வகையில் கோஷம் எழுப்பியவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜனவரி 25 ஆம் தேதி அன்று ஷாருக்கான்...