கோவை தனியர் பள்ளியில் ஆர் எஸ் எஸ் பயிற்சி முகாம் – 5 பேர் மீது வழக்கு பதிவு!

364

கோவை (01 ஜன 2022): கோவை விளாங்குறிச்சி தனியார் பள்ளியில் நடந்த ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாமை தொடர்ந்து 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை விளாங்குறிச்சி தனியார் பள்ளியில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு எதிராக த.பெ.தி.க., நாம் தமிழர் உள்ளிட்ட கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பள்ளி வளாகத்திற்கு வெளியே நின்றிருந்த நபர்களை காவல்துறையினர் உள்ளே செல்ல அறிவுறுத்தினர். ஆனால் அவர்கள் கேட்கவில்லை. இதனால், காவலர்களுக்கும் அவர்களுக்கும் இடையே வாக்குவாதம், தள்ளு முள்ளு ஏற்பட்டது.

இதைப் படிச்சீங்களா?:  அதிமுகவிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி நீக்கம் - போஸ்டரால் பரபரப்பு!

இந்த விவகாரம் தொடர்பாக, ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாவட்ட செயலாளர் முருகன், பாஜகவைச் சேர்ந்த காளிதாஸ், இந்து முன்னணியைச் சேர்ந்த கோவிந்தன், ஆர்எஸ்எஸ் அமைப்பின் அருண், கருப்புசாமி ஆகிய ஐந்து பேர் மீது இரு பிரிவுகளில் பீளமேடு காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல், சட்ட விரோதமாக ஒன்று கூடுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவுச் செய்யப்பட்டுள்ளது.