சசிகலா தலைமையில் மீண்டும் அதிமுக – பச்சை கொடி காட்டும் ஓபிஎஸ்!

சென்னை (24 மார்ச் 2021): தேர்தலுக்குப் பிறகு சசிகலா தலைமையில் அதிமுக இயங்க வாய்ப்பு உள்ளதாக நடக்கும் நிகழ்வுகள் காட்டுகின்றன.

தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக்கொள்ளும் எண்ணமே இல்லை என்று முதல்வர் எடப்பாடி தெரிவித்திருந்தார்.

ஆனால் அவர் மீண்டும் அரசியலுக்கு வந்தால் கட்சியில் இணைக்கப்படுவாரா என்ற கேள்விக்குப் பதில் அளித்த ஓ.பி.எஸ்., “என்னை பொருத்தவரையில், மனிதாபிமானம் அடிப்படையில் பார்த்தால் அவர் நான்கு ஆண்டுகாலம் சிறை தண்டனை அனுபவித்துவிட்டார். ஒரு தனிப்பட்ட நபருக்காகவோ, ஒரு குடும்பத்திற்காகவோ கட்சி தற்போது இயங்கவில்லை. அது ஜனநாயக முறைப்படி இயங்கிக்கொண்டிருக்கிறது. இந்த அமைப்பை அவர் ஏற்றுக்கொண்டால் அவரை சேர்த்துக்கொள்வதைப் பரிசீலிக்கலாம்” என்று தெரிவித்திருந்தார். ஓ.பி.எஸ்.சின் இந்தக் கருத்து அதிமுக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையே ஓபிஎஸ்சும் எட்டப்படியும் இன்று ஆலோசனை நடத்தியுள்ளனர். இது சசிகலாவை கட்சியில் சேர்த்துக்கொள்வது தொடர்பாகத்தான் இருக்கும் என கூறப்படுகிறது.

ஹாட் நியூஸ்:

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் துப்பாக்கிச் சூடு – 10 பேர் பலி!

கலிபோர்னியா (23 ஜன 2023): அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள மான்டேரி பூங்காவில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 10 பேர் வரை கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மான்டேரி பூங்காவில்...

சவூதிஅரேபியாவில் ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகளை பெற்றெடுத்த பெண்!

ரியாத் (24 ஜன 2023): சவூதி அரேபியா ரியாத்தில் ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகளை ஒரு பெண் பெற்றெடுத்துள்ளார். கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டியில் சவூதி நட்டு பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகள்...

குஜராத் இனப்படுகொலை குறித்த பிபிசி ஆவணப்படம் இரண்டாம்பாகம் இன்று வெளியாகிறது!

புதுடெல்லி (24 ஜன 2023): குஜராத் இனப்படுகொலை குறித்த பிபிசி ஆவணப் படத்தின் இரண்டாம் பாகம் இன்று ஒளிபரப்பாகிறது. ‘இந்தியா: மோடி கேள்வி’ என்ற பெயரில் பிபிசியின் ஆவணப்படத்தின் முதல் பாகம் சமீபத்தில் வெளியானது. வெளியான...