திமுகவை வீழ்த்த எடப்பாடியுடன் கைகோர்க்க சசிகலா திட்டம்!

Share this News:

சென்னை (09 பிப் 2021): எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் எதிரி அல்ல திமுகவே எதிரி என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சசிகலா விடுதலையான நிலையில் தமிழக அரசியலில் பல மாற்றங்கள் நிகழக் கூடும் என எதிர் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் டி.டி.வி. தினகரன் சென்னை தி.நகரில் உள்ள இல்லத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கட்சியின் பொதுச்செயலாளரை பார்க்க வந்த நிர்வாகிகளை நீக்குவது என்பது விந்தையாக உள்ளது. உண்மைக்காக போராடுபவர்கள் நிச்சயம் எங்களுடன் தான் வருவார்கள்.

சசிகலா வரும் வழியில் சில இடங்களில் தடைகள் இருந்தது. அதையும் மீறி தான் வந்திருக்கிறோம். சசிகலா முதலில் வந்த காரில் ஏசி கோளாறு ஏற்பட்டது. எனவே தான் அ.தி.மு.க. நிர்வாகி சம்பங்கியின் காரில் சசிகலா வந்தார்.

அ.ம.மு.க. தொடங்கப்பட்டதே அ.தி.மு.க.வை மீட்க தான். அ.தி.மு.க.வை மீட்ட பின்னர் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். அ.தி.மு.க.வில் தொடர்வார்களா என்பது குறித்து பேசுவோம்.

ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என சசிகலா கூறுகிறார். புரிய வேண்டியவர்கள் புரிந்து கொள்வார்கள் என நம்புகிறேன்.

தட்சணாமூர்த்தி, சம்பங்கி போல் உண்மைக்காக போராடக்கூடியவர்கள் அ.தி.மு.க.வில் நிறையபேர் இருக்கிறார்கள். பொறுத்திருந்து பாருங்கள்.

ஜெயலலிதா நினைவிடம், அ.தி.மு.க. தலைமை அலுவலகம் செல்வது குறித்து சசிகலா முடிவு செய்வார்.

சசிகலா சென்னைக்கு வந்த போது ஒருசில இடங்களில் வாகனங்களுக்கு தடை விதித்தனர். அதை முறியடித்து பயணித்து வந்தோம். அ.ம.மு.க. தொடங்கப்பட்டதே அ.தி.மு.க.வை மீட்டெடுக்க தான். மீட்டெடுப்பது பற்றிய அர்த்தத்தை அகராதியில் பாருங்கள்.

எங்களை பொருத்தவரை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் எங்களுக்கு எதிரி அல்ல. திமுகவே எங்களது எதிரி.”

இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்தார்.


Share this News:

Leave a Reply