மாணவர்கள் ரமலான் நோன்பு இருக்க பள்ளி ஆசிரியர்கள் தடை – தமிழகத்திலுமா இப்படி?

கிருஷ்ணகிரி (08 ஏப் 2022): மாணவர்கள் ரமலான் நோன்பு இருக்க ஆசிரியர்கள் தடை விதித்ததால் பெற்றோர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே கொரல்தந்தம் கிராமத்தில் அரசு உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு படிக்கும் மாணவர்களில் பெரும்பாலானோர் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்கள்.

இந்தநிலையில் ரமலான் நோன்பு தற்போது கடைபிடிக்கப் பட்டு வருவதால் மாணவர்கள் நோன்பு இருந்து வருகின்றனர். இதற்கு தடை விதித்த பள்ளி தலைமை ஆசிரியை கலாவதி, நோன்பு இருப்பதை தவிர்க்க கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் உடற்கல்வி ஆசிரியர் செந்தில் குமாரும் மதரீதியாக இழிவுப்படுத்தி பேசியதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் பள்ளி நிர்வாகத்தின் செயலால் ஆத்திரமடைந்த மாணவர்களின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிக்கு விரைந்து வந்து பெற்றோர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். மேலும் நோன்பிருக்க தடை விதித்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து மாணவர்களின் பெற்றோர் கலைந்து சென்றனர்.

ஹாட் நியூஸ்: