புதுமைப் பெண் திட்டம் பிச்சை எடுக்கும் திட்டம் – சீமான் சாடல்!

334

சென்னை (05 செப் 2022): புதுமைப் பெண் திட்டம், மாணவர்களை பிச்சை எடுக்க வைக்கும் செயல் இதற்காக ஒதுக்கப்பட்ட நிதியை பள்ளிக்கூடங்களின் வளர்ச்சிக்கு செலவு செய்திருக்கலாம் என சீமான் தெரிவித்துள்ளார்.

6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப்பள்ளியில் படித்து உயர்கல்விக்காக கல்லூரியில் சேர்ந்த மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும். புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் சுமார் 6 லட்சம் மாணவிகள் ஆண்டுதோறும் பயன்பெறுவர்.

இந்த புதுமைப்பெண் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்துள்ளார். புதுமைப்பெண் என்ற பெயரிலான திட்டத்தை சென்னை ராயபுரம் பாரதி மகளிர் கல்லூரியில் பயனடைய உள்ள மாணவிகளுக்கு புதுமைப்பெண் என்று அச்சிடப்பட்ட டெபிட் கார்டுகளை முதலமைச்சர் வழங்கினார்.

இதைப் படிச்சீங்களா?:  தமிழக பாஜகவில் விரைவில் அதிரடி மாற்றங்கள் - கலக்கத்தில் பெரிய தலைகள்!

இந்நிலையில் இந்த திட்டத்தை விமர்சித்து பேசியுள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், ‘புதுமைப் பெண் திட்டம், மாணவர்களை பிச்சை எடுக்க வைக்கும் செயல் இதற்காக ஒதுக்கப்பட்ட நிதியை பள்ளிக்கூடங்களின் வளர்ச்சிக்கு செலவு செய்திருக்கலாம்; ராகுல் காந்தி நடைபயணத்தால் எந்த மாற்றமும் ஏற்படாது.’ என தெரிவித்துள்ளார்.