ஆபாச வீடியோ பாஜக தலைவர் கே.டி .ராகவனுக்கு சீமான் ஆதரவு!

1153

சென்னை (30 ஆக 2021): ஆபாச வீடியோவில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தமிழக பாஜக தலைவர் கே.டி.ராகவனுக்கு நாம் தமிழர் தலைவர் சீமான் ஆதரவு தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜகவில் முக்கிய தலைவராக இருந்தவர் கே.டி .ராகவன். அவரின் ஆபாச வீடியோவை மதன் என்பவர் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். தற்போது மதன் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கே.டி .ராகவன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மேலும் தமிழக பாஜக இதுகுறித்து எந்தவிதமான கருத்தையும் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யவில்லை. இப்படிப்பட்ட சூழலில், ராகவனின் வீடியோ பற்றி சீமான் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்துள்ளார்.

அப்போது “அவருடைய ஒப்புதல் இல்லை, அவருடைய அனுமதியும் இல்லை.. அவருக்கே தெரியாமல் அவருடைய வீட்டின் படுக்கையறையிலும் கழிவறையிலும் கேமராவை வைத்து வீடியோ எடுத்துவிட்டு வருவதுதான் முதலில் சமூக குற்றம்.. அதைச் செய்து வெளியிட்டவரைத் தான் முதலில் கைது செய்திருக்க வேண்டும்… இந்த உலகத்திலேயே எங்கும் நடக்காத ஒன்ற இவர் செய்துவிட்டார் என்பது போல காட்டிக்கொண்டிருக்கிறீர்கள்?’ என்றார்.

சீமானின் கருத்துக்கு அனைத்துக் கட்சி பெண் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.