முதல்வர் வேட்பாளர் எடப்பாடி இல்லையா? – பீதியை கிளப்பும் செல்லூர் ராஜூ!

Share this News:

மதுரை (26 டிச 2020): அகில இந்திய கட்சி என்பதால் பாஜக தான் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

மதுரை பழங்காநத்தம் பகுதியில் அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், முதல்வர் வேட்பாளர் குறித்து தெரிவிக்கையில், “பாரதிய ஜனதாவை பொறுத்தவை அகில இந்திய கட்சி என்பதால் அவர்களின் கொள்கைப்படி அகில இந்திய கட்சியின் தலைவர்தான் கூட்டணியில் முதல்வர் வேட்பாளரை அறிவிப்பார்கள். கூட்டணியில் மாநில கட்சிகள் மட்டும் இருந்தால் மாநில கட்சிகள் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கலாம். ஆனால் மாநில கட்சிகளோடு அகில இந்திய கட்சிகள் கூட்டணியில் இருக்கும்போது முதல்வர் வேட்பாளரை மாநிலக் கட்சிகள் அறிவிக்க கூடாது என்பதால் அகில இந்திய கட்சி அறிவிக்கும்.” என்றார்.


Share this News:

Leave a Reply