கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் ஒரு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டலே அதிக பாதுகாப்பு!

Share this News:

புதுடெல்லி (15 ஜூன் 2021): தொற்றில் இருந்து மீண்டவர்கள் ஒரு டோஸ் போட்டுக்கொண்டாலே அதிக பாதுகாப்புடன் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டதற்கு முன்பு நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம், நடத்திய ஆய்வில், அவர்களுக்கு, ஒரு டோஸ் தடுப்பூசி கொடுக்கப்பட்டதிலேயே, நிறைய ஆன்டிபாடிகள் உடலில் உற்பத்தி செய்யப்பட்டன என்று ஆய்வு முடிவுகள் வெளிப்படுத்தின. அதேசமயம் தொற்று ஏற்படாதவர்களில், ஆன்டிபாடிகள் குறைவாகவே இருந்தன. கோவிட்டால் பாதிக்கப்படுகையில், உடல் அதை எதிர்த்துப் போராடுவதற்கு ஆன்டிபாடி என்னும் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது.

ஆன்டிபாடிகளை உருவாக்கும் இந்த செயல்முறை நபரின் நினைவக செல்களில் பதிவு செய்யப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், மீண்டும் தொற்று ஏற்பட்டால், இந்த நினைவக செல்கள் மீண்டும் செயல்படுகின்றன மற்றும் ஆன்டிபாடிகளை விரைவாக உருவாக்க முடிகிறது. இவ்வாறு அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.


Share this News:

Leave a Reply