தூத்துக்குடி அருகே பாஜக நிர்வாகி வெட்டிக் கொலை – 6 பேர் கைது!

441

தூத்துக்குடி (5 நவ 2020): தூத்துக்குடி அருகே பாஜக நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், தென்திருப்பேரை அருகேயுள்ள தெற்கு கோட்டூரைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் ராமைய்யா தாஸ் (51). பாஜக தெற்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார். இவருக்கு சொந்தமான நிலத்தில், தென்திருப்பேரை கோனார் தெருவைச் சேர்ந்த இசக்கி (25) என்பவரின் மாடுகள் மேய்ந்துள்ளது.

இதனை ராமையா தாஸ் தட்டிக் கேட்டதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கிராம மக்கள் இருவரையும் சமாதானப்படுத்தி வைத்துள்ளனர். இந்நிலையில் இன்று காலை 5 மணியளவில், ராமைய்யா தாஸ் அப்பகுதியில் உள்ள டீக்கடையில் நின்றுகொண்டிருந்தபோது அங்கு வந்த இசக்கி அவரிடம் தகராறு செய்து, ராமையா தாஸை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதைப் படிச்சீங்களா?:  செம்பரம்பாக்கத்திலிருந்து சீறிப்பாய்ந்த தண்ணீர் - அடையாறு மக்களுக்கு எச்சரிக்கை!

இதுகுறித்து தகவல் அறிந்து ஆழ்வார் திருநகரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பரிசோதனைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிந்து கொலையாளியை தேடி வந்த நிலையில் முத்துமகன் மாரி, இசக்கி,செல்வம், சரஸ்வதி,கசமுத்து மற்றும் சுந்தர் ஆகிய 6 பேரை போலிசார் இது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.