கொஞ்சம் பொறுமையாக இருங்கள் – பாமகவுக்கு ஸ்டாலின் பதில்!

698

சென்னை (23 ஜூன் 2021): வன்னியர் இடஒதுக்கீடு விவகாரத்தில் நல்ல முடிவு எடுக்கப்படும், கொஞ்சம் பொறுமையாக இருங்கள் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீடு தொடர்பாக பாமக எம்எல்ஏ ஜிகே மணி சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார் . இது குறித்து பேசிய முதல்வர் மு க ஸ்டாலின், “ஆட்சிப் பொறுப்பில் இருந்து கொரோனாவை குறைப்பதற்காக இரவு பகல் பாராது கவனம் செலுத்தி இப்போதுதான் கொஞ்சம் மூச்சு விட ஆரம்பித்து இருக்கிறோம். ஆகவே பாமக உறுப்பினர் உடைய கோரிக்கை குறித்து சம்பந்தப்பட்ட துறையில் உள்ள அதிகாரிகளோடு விரிவாக ஆலோசனையும் ஆய்வும் நடத்தி ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும் என்ற உறுதியை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.” என்று கூறினார்.