பிரதமர் மோடியை சந்தித்தார் முதல்வர் ஸ்டாலின்!

Share this News:

புதுடெல்லி (17 ஜூன் 2021): தமிழ் நாட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

மாலை 5 மணியளவில் பிரதமர் மோடி – தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அவருடன், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், டில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, உள்துறை செயலாளர், செய்தி மற்றும் மக்கள் தொடர்பு இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகளும் உடனிருந்தனர்.

அப்போது தமிழ்நாட்டிற்கு கூடுதல் தடுப்பூசி வழங்க வலியுறுத்தினார். நீட் தேர்விலிருந்து விலக்கு, தடுப்பூசி, கருப்பு பூஞ்சை மருந்து, கொரோனா பேரிடர் நிதி, நிலுவை ஜி.எஸ்.டி தொகை குறித்து பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

முன்னதாக இன்று (ஜூன் 17) காலை டில்லி புறப்பட்டு சென்றார். சிறப்பு விமானம் மூலமாக டில்லி சென்ற அவர், டில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கினார். சிறப்பு விமானம் மூலமாக டில்லி சென்ற அவருக்கு திமுக., எம்.பி.க்களும், நிர்வாகிகளும் சிறப்பான வரவேற்பு அளித்தனர். டில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கிய அவர், டில்லியில் கட்டப்பட்டு வரும் தி.மு.க., கட்சி அலுவலகத்தையும் பார்வையிட்டார்.


Share this News:

Leave a Reply