முதல்வர் ஸ்டாலின் மீண்டும் டெல்லி பயணம்!

503

சென்னை (18 ஜூலை 2021): தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்ற பின் இரண்டாவது முறையாக இன்று மாலை மு.க.ஸ்டாலின் டெல்லி செல்ல இருக்கிறார்.

நாளை பகல் 12 மணிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை சந்தித்து பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசுகிறார்.

இதைப் படிச்சீங்களா?:  கீழக்கரை திமுக கவுன்சிலர் போதைப்பொருள் கடத்தவில்லை - சுங்கத்துறை அதிகாரிகள் தகவல்!

அதேபோல் அண்மையில் தமிழகத்திற்கு ஒன்றிய அரசால் ஒதுக்கப்படும் கொரோனா தடுப்பூசிகளின் அளவு குறைவாக உள்ளதால் மக்கள் தொகை அளவைக் கணக்கில் கொண்டு மேலும் கூடுதலாக தமிழகத்திற்கு ஒரு கோடி தடுப்பூசிகளை அனுப்ப வேண்டும் என கடிதத்தின் வாயிலாக பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.