சிறு துரும்பையும் பூதாகரமாக்கி விமர்சிப்பார்கள் – ம.செ க்களுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை!

313

சென்னை (26 ஜூன் 2021): சென்னை அறிவாலயத்தில் நேற்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் தொடர்பாக நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.

ஸ்டாலின் இக்கூட்டத்தில் பேசிய போது, சட்டமன்றத் தேர்தலில் பெரிய வெற்றியைப் பெற முடியவில்லை. ஆனாலும் ஆட்சியைப் பிடித்து விட்டோம் அடுத்த தேர்தலில் இமாலய வெற்றி பெறும் அளவிற்கு மாவட்ட செயலாளர்கள் மக்கள் சேவையில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார் அவர் மேலும், எதிர்க்கட்சியாக நாம் இருந்தபோது எந்த விமர்சனமும் வரவில்லை. ஆனால் ஆளுங்கட்சியாக இருப்பதால் சிறு துரும்பு பிரச்சனையையும் பெரிய பூதாகரமாக்கி விமர்சிப்பார்கள். அதற்கு நாம் இடம் கொடுத்து விடக்கூடாது என்றும், மா.செக்களை கேட்டுக்கொண்டாராம்.

சட்டமன்றத் தேர்தலின்போது சில மாவட்டச் செயலாளர்கள் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன அவர்கள் தங்களை இனியாவது திருத்திக் கொள்ள வேண்டும் என்றும் மா.செ.க்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறார். மேலும், சட்டமன்றத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகள் எதிர்பார்த்த தொகுதியை நிறைவேற்றித் தர முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக் கொடுத்து அவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து இடப்பங்கீடு வழங்க வேண்டும் என்று ஸ்டாலின் சொல்லியிருக்கிறார்.