ஞாயிறு ஊரடங்கு ரத்தாகுமா? முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை!

சென்னை (27 ஜன 2022): தமிழகத்தில் அடுத்த கட்ட ஊரடங்கு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு நாள் ஒன்றுக்கு முப்பதாயிரத்துக்கு மேல் பதிவாகி வந்த நிலையில் நேற்றைய தினம் சற்று குறைந்து 29,976 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.அதிகபட்சமாக சென்னையில் 5973 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்தபடியாக கோவையில் 3740, செங்கல்பட்டில் 1883 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தற்போதுள்ள கொரோனா கட்டுப்பாடுகள் ஜனவரி 31ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அடுத்தகட்ட ஊரடங்கு குறித்து தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

பாதிப்பு குறையத் தொடங்கினால் ஞாயிறு முழு ஊரடங்கு தேவை இருக்காது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். எனவே ஞாயிறு முழு ஊரடங்கு இந்த வாரம் இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு 1 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளைத் தொடங்கி நேரடி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என தனியார் பள்ளிகள் கூட்டமைப்பும் வலியுறுத்தி வருகிறது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது 10 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்க வேண்டும் என முதல்வரிடம் பரிந்துரைத்ததாகக் கூறினார்.

ஞாயிறு முழு ஊரடங்கு இரத்துச் செய்யப்பட்டாலும், வழிபாட்டுத் தலங்களுக்கான தடை தொடரலாம் என கோட்டை வட்டாரத்தில் செல்லப்படுகிறது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ளதால் அதற்கான பிரச்சாரங்களும் தொடங்க உள்ள நிலையில், இரவு நேர ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது.

ஹாட் நியூஸ்:

சக ஊழியரை மிரட்டிய மேலாளருக்கு அபராதம் விதித்த துபாய் நீதிமன்றம்!

துபாய் (07 டிச 2022): சக ஊழியரை மிரட்டியதற்காக மருந்தக மேலாளருக்கு ஐக்கிய அரபு அமீரக நீதிமன்றம் அபராதம் விதித்தது. மருந்தக மேலாளருக்கும், சக ஊழியருக்கும் இடையே ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்னையால், சக ஊழியரையும்,...

டிசம்பர் 6 தலித் இஸ்லாமியர் எழுச்சி நாள் – திருமாவளவன் அறிக்கை!

சென்னை (06 டிச 2022): டிசம்பர் 6 ஐ தலித் இஸ்லாமிய எழுச்சி நாளான இன்று சகோதரத்துவத்துவத்தை வளர்த்தெடுக்க விடுதலை சிறுத்தைகள் கட்சி அழைப்பு விடுத்துள்ளது, இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள...

புனித மக்காவில் உம்ரா செய்யும் நடிகர் ஷாரூக்கான்!

ஜித்தா (02 டிச 2022): பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் உம்ரா செய்வதற்காக புனித மக்காவிற்க்கு சென்றுள்ளார். மக்கா வந்துள்ள ஷாரூக்கானுடன் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் செல்ஃபிக்கள் எடுத்துள்ளனர். அல்லாஹ் அவருடைய பிரார்த்தனைகளைக் கேட்பானாக. அவருக்கும்...