சென்னை (22 செப் 2018): கனிமொழி, மற்றும் கருணாநிதி குறித்து அவதூறு பரப்பியதற்காக பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதி மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி குறித்து, பா.ஜ.க-வின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா கடந்த ஏப்ரல் மாதம் ட்விட்டர் பக்கத்தில் தரக்குறைவாக விமர்சனம் செய்திருந்தார். அதற்கு, கடும் எதிர்ப்புகள் எழுந்தன. இதையடுத்து, கோவை மாவட்டம் கனியூர் முன்னாள் பேரூராட்சித் தலைவர் (தி.மு.க) வேலுச்சாமி என்பவர், கடந்த ஏப்ரல் மாதம் கருமத்தம்பட்டி போலீஸில் புகார் அளித்திருந்தார். இதைத்தொடர்ந்து, ஹெச்.ராஜா மீது 500, 501 ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல, ஈரோட்டிலும் நேற்று ஹெச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. சமீபத்தில் நீதிமன்றம் மற்றும் காவல்துறை குறித்து ஹெச்.ராஜா பேசிய கருத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில், அவருக்கு கிலி ஏற்படுத்துவதற்காகவே, புகார் அளித்து 4 மாதங்களுக்குப் பிறகு வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக போலீஸ் வட்டாரங்களில் கூறுகின்றனர்.

தூத்துக்குடி (19 செப் 2018): மறைந்த திமுக தலைவர் கருணாநிதி குறித்து பேசியதற்கு அமைச்சர் கடம்பூர் ராஜு மன்னிப்பு கோரியுள்ளார்.

சென்னை (18 செப் 2018): கருணாநிதிக்கு அளிக்கப் பட்ட அரசு மரியாதை அதிமுக அளித்த பிச்சை என்று என்று செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

சென்னை (05 செப் 2018): முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி நடத்திய பேரணி குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

மதுரை (02 செப் 2018): சென்னையில் அழகிரி நடத்தவுள்ள பேரணி எப்படி இருக்க வேண்டும்? என்று ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

Page 1 of 24

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!