அருப்புக்கோட்டை (02 பிப் 2019): சிறையில் இருக்கும் பேராசிரியை நிர்மலாதேவிக்கு முதுகு வலி அதிகமானதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பெங்களூரு (24 நவ 2018): முன்னாள் மத்திய ரெயில்வே அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஜாஃபர் ஷரீப் (85) திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

சென்னை (03 அக் 2018): தேமுதிக தலைவர் விஜய் காந்த் மீண்டும் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதால் தொண்டர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

சென்னை (30 செப் 2018): மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தீவிர சிகிச்சப் பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக ஐ.நா. சபையில் பேசிவிட்டு திரும்பிய திருமுருகன் காந்தியை கடந்த ஆகஸ்டு 9ம் தேதி பெங்களூரில் வைத்து போலீசார் அவரை கைது செய்தது. அவர் மீது பல வழக்குகளை பதிவு செய்து அவரை வேலூர் சிறையில் அடைத்தது.

ஆனால், சிறையில் பலமுறை அவர் மயங்கி விழுந்ததாக தொடர்ந்து செய்திகள் வெளிவந்து கொண்டே இருக்கிறது. சமீபத்தில அவரை சந்தித்து விட்டு செய்தியாளர்களிடம் பேசிய வைகோ “ திருமுருகன் காந்தியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. சிறையில் அவருக்கு வெந்நீர் வைத்துக்கொள்ளக் கூட அனுமதி அளிக்கப்படவில்லை” என்ற பகீர் தகவலை கூறினார்.

நேற்று காலையும் சிறையில் திருமுருகன்காந்தி மயங்கி விழுந்துள்ளர். எனவே, தற்போது அவர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு குடல்புண் இருப்பது மருத்துவ பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுபோக, வயிற்றுவலி, வாயு பிரச்சனை, அல்சர், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பிரச்சனைகளும் அவருக்கு இருக்கிறது. சிறையில் அவருக்கு அளிக்கப்படும் உணவுகளும் அவரின் உடலுக்கு ஒத்துப்போகவில்லை. ஆனால், அவர் விவாகரத்தில் அரசு அலட்சியம் காட்டி வருகிறது என மே 17 இயக்கத்தின் நிர்வாகிகள் புகார் கூறி வருகின்றனர்.

அவருக்கு உடல்ரீதியான சித்ரவதைகளை கொடுத்து மறைமுகமாக அவரை பலவீனப்படுத்தி அவரின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தி வருகிறார்கள் என சமூக வலைத்தளங்களிலும் அரசுக்கு எதிராக கருத்துகள் தொடர்ந்து பதிவு செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

சென்னை (27 செப் 2018): திமுக தலைவர் ஸ்டாலின் அப்பல்லோ மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

பக்கம் 1 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...