தமிழகம் இதில் இரண்டாவது இடம் – எதில் தெரியுமா?

468

சென்னை (19 ஜன 2020): தற்கொலை செய்து கொள்பவர்களில் இந்தியாவிலேயே தமிழகம் இரண்டாவது இடம் பிடித்துள்ளது.

வேலையில்லாமல் உயிரிழந்தவர்கள் குறித்த புள்ளி விவரங்களை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ளது.

இதில் ‘கடந்த 2018-வது ஆண்டில் மட்டும் சுயதொழில் செய்பவர்கள் 13,149 பேரும், வேலையில்லாதவர்கள் 12,936 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதில் தினம்தோறும் வேலையில்லாதவர்கள் 35, சுயதொழில் செய்வோர் 36 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இதைப் படிச்சீங்களா?:  பாஜகவைக் கை கழுவும் எடப்பாடி - அதிர்ச்சியில் பாஜக!

தற்கொலை செய்து கொண்டவர்களில் விவசாயிகள் 10,349 பேர், வேலை கிடைக்காமல் 12 ,936 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். எல்லா காரணிகளுக்காகவும் 2018-ம் ஆண்டில் மகாராஷ்ட்ராவில் 17,972 பேரும், தமிழகத்தில் 13,896 பேர் என மொத்தம் ஒரே ஆண்டில் சுமார் 1.34 லட்சம் பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இந்த பட்டியலில் மராட்டிய மாநிலம் (17,972) முதல் இடத்திலும், தமிழகம்( 13,896 ) இரண்டாவது இடத்திலும், மேற்குவங்கம் (13,255 ) மூன்றாவது இடத்திலும், உள்ளன.