கொரோனா கொடுமையில் இப்போது இது அவசியமா?

Share this News:

சென்னை (04 மே 2020): கொரோனா வைரஸ் ஒரு புறம் பரவிக் கொண்டு இருக்க டாஸ்மாக் கடைகளை வரும் 7 ஆம் தேதி திறக்கவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்கூறி இருப்பதாவது:

தமிழகத்தில் வரும் 7 ம் தேதி முதல் டாஸ்மாக்கடைகள் திறக்கப்படும். அரசின் நிபந்தனைகளுக்கு உட்பட்டுb செயல்பட வேண்டும். டாஸ்மாக்கடைகள் திறக்கப்பட்டாலும் பார்கள் திறக்க அனுமதிஇல்லை. மேலும் காலை 10 மணி முதல் மாலை 5மணி வரை மட்டுமே கடைகள் திறக்க வேண்டும். சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

மதுபான கடைகளில் ஒரே நேரத்தில் 5 பேர்களுக்கு மேல் கூடுவதற்கு அனுமதிக்கப்படாது. கொரோனா நோய் கட்டுப்பாடு பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது .

இவ்வாறு அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே கொரோனா கொடுமையில் இப்போதைக்கு டாஸ்மாக் கடைகளை திறப்பது அவசியமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.


Share this News: