என்ஆர்சி, என்பிஆர் சட்டங்களில் ரஜினியும் சிக்குவார்? – தமிமுன் அன்சாரி அதிரடி!

Share this News:

சென்னை (05 பிப் 2020): நடிகர் ரஜினியின் முன்னோர்கள் ஆவணம் உண்டா இல்லையேல் என்ஆர்சி, என்பிஆர் சட்டங்களில் ரஜினியும் சிக்குவார் என்று தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தால் இந்திய முஸ்லிம்களுக்கு ஆபத்து எதுவும் இல்லை என்று ரஜினி தெரிவித்தார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மனித நேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும், எம்.எல்.ஏவுமான தமிமுன் அன்சாரி, “கந்துவட்டி உள்ளிட்ட சட்ட விரோத தொழில்களை ரஜினி செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில், இதிலிருந்து தன்னை காப்பற்றிக் கொள்வதற்காக, மத்திய பாஜக அரசை திருப்திப்படுத்துவதற்காக இப்படிப் பேசி வருகிறாரோ என்று எங்களுக்கு சந்தேகம் வருகிறது. சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி ஆகிய சட்டங்கள் குறித்து ரஜினிக்குப் போதிய ஆழமான பார்வை இல்லை. சிஏஏ சட்டத்தில் மதப்பாகுபாடு காட்டப்படுகிறது என நாங்கள் குற்றம் சாட்டி வருகிறோம். இலங்கைத் தமிழர்களையும் பாதிக்கிறது. என்ஆர்சி, என்பிஆர் சட்டங்கள் முஸ்லிம்களை மட்டுமல்ல அனைத்து மதத்தினரையும் பாதிக்கும், அதற்கு எடுத்துக்காட்டாக அசாம் மாநிலம் உள்ளது.

ரஜினிகாந்தின் முன்னோர்களின் ஆவணங்களைக் கேட்டால், அதற்கான ஆதாரத்தை காட்டத் தயாராக இருக்கிறாரா? அந்த ஆவணங்கள் அவரிடம் இருக்கிறதா? இப்படி அடிப்படை விஷயங்கள் கூட தெரியாமல் பேசுகிறார். போராட்டங்களை அரசியல் கட்சிகள் தூண்டி விடுவதாகப் பேசுகிறார். நாட்டின் யதார்த்த நிலை தெரியாமல் பேசி வருகிறார். எந்த தலைவர்களின் கட்டுப்பாட்டாலும் போராட்டங்கள் இப்போது நடைபெறுவது இல்லை. மக்களே தன்னெழுச்சியாகப் போராடுகின்றனர். எந்தத் தலைவர்கள் சொன்னாலும் கேட்க மாட்டார்கள். மக்களைச் சமாதானப்படுத்தும் நிலையில் தான் மத்திய அரசும் உச்ச நீதிமன்றமும் இருக்கிறது. ரஜினியின் பேச்சு கண்டனத்துக்குரியது..” என்றார்.


Share this News:

Leave a Reply