மத்திய அரசின் உத்தரவுக்கு தமீமுன் அன்சாரி ஆதரவு!

சென்னை (03 செப் 2020): பப்ஜி உள்ளிட்ட 118 செயலிகளை மத்திய அரசு தடை செய்திருப்பதற்கு நாகை எம்எல்ஏவும், மஜக பொதுச்செயலாளருமான மு.தமிமுன் அன்சாரி ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“நமது நாட்டின் வளரும் தலைமுறையினரின் எதிர்கால நலன் கருதி பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டு செயலிகளை தடை செய்ய வேண்டும் என கடந்த 01.07.2020 அன்று மஜக சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தோம். நேற்று அவற்றை மத்திய் அரசு தடை செய்திருப்பதை வரவேற்கிறோம்.

பொழுதுபோக்கு என்ற பெயரில் குழந்தைகளையும், சிறுவர், சிறுமிகளையும் உளவியல் ரீதியாக அடிமைப்படுத்தி, அவர்களை தவறான திசையில் இந்த செயலிகள் வழிநடத்தின. இப்போது இதற்கு முற்றுப்புள்ளி வைத்திருப்பதுடன், இது போன்ற அம்சங்களுடன் வேறு புதிய செயலிகளை வரவிடாமல் தடுப்பதும் மத்திய அரசின் கடமையாகும்.

இதற்கு மாற்றாக கைப்பந்து, கால்பந்து, கூடைப்பந்து, பூப்பந்து, கபடி போன்ற கள விளையாட்டுகளையும், நீச்சல் அடித்தல், சைக்கிள் ஓட்டுதல், கேரம் பலகை, விளையாடுதல் போன்ற இதர விளையாட்டுகளையும் தங்கள் பிள்ளைகளுக்கு ஊக்குவிக்க பெற்றோர்கள் முயல வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்”

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

ஹாட் நியூஸ்:

ப்ளூடூத் பயன்படுத்துபவர்கள் கவனிக்க வேண்டியவை!

ப்ளூடூத் மற்றும் ஒயர்லெஸ் சாதனங்களின் டிமாண்ட் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கையில் கட்டும் ஸ்மார்ட்வாட்ச், கழுத்தோடு மாட்டப்படும் ப்ளூடூத் ஹெட்செட், ஒயர்லெஸ் ஏர்பாட், மவுஸ், ஸ்பீக்கர் என அதன் பட்டியல்...

மத ஒற்றுமையை சீர்குலைப்பதாக எம்பி பத்ருத்தீன் அஜ்மல் மீது எதிர்கட்சிகள் புகார்!

கவுஹாத்தி (05 டிச 2020;): மத ஒற்றுமையை சீர்குலைப்பதாகக் கூறி அஸ்ஸாம் எம்பி பத்ருத்தீன் அஜ்மல் மீது எதிர் கட்சிகள் போலீசில் புகார் அளித்துள்ளன. இந்துக்களும் முஸ்லிம்கள் போல் தங்கள் பிள்ளைகளுக்கு இளம்வயதிலேயே திருமணம்...

தவறான முடிமாற்று அறுவை சிகிச்சையால் இளைஞர் மரணம்!

புதுடெல்லி (04 டிச 2022): டெல்லியில் உள்ள கிளினிக் ஒன்றில் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்த 30 வயது அதர் ரஷீத் என்பவர் மருத்துவ அலட்சியத்தால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷீதுக்கு...