நாங்கள் இந்துக்களுக்கு எதிரான கட்சி அல்ல – திருமாவளவன் விளக்கம்!

542

சென்னை (14 மார்ச் 2021): நாங்கள் இந்துக்களுக்கு எதிரான கட்சியல்ல பாஜகவின் கொள்கைகளுக்கு எதிரான கட்சி என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

‘இந்தியா டுடே’ செய்தி நிறுவனம் ‘தென்னிந்தியா 2021’ என்கிற பெயரில் அரசியல் கருத்தரங்கு நிகழ்வை நடத்தி வருகிறது. இந்நிகழ்வில் பங்கேற்றுப் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், “ஒரே நாடு; ஒரே கலாச்சாரம் என்பதே பா.ஜ.க-வுடைய தேசியவாதம். இந்த ஒற்றைக் கலாச்சார பிரச்சாரம் ஜனநாயகத்திற்கு எதிரானது. பன்மைத்துவத்திற்கு எதிரானது.

இதைப் படிச்சீங்களா?:  தமிழகத்தில் சுழற்றி எடுக்கவுள்ள காற்றும் மழையும்!

நாங்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள் அல்ல; பா.ஜ.க-வின் கொள்கைக்கு எதிரானவர்கள். என் மொழி தமிழ்; நான் தமிழன்; எல்லோரும் ஏன் ஒரே கூரைக்குள் வரவேண்டும்? உங்களைப் பொறுத்தவரை இந்துக்கள் மட்டுமே இந்தியர்கள்.

இது வெறும் தேர்தலுக்கான கூட்டணி அல்ல. நாங்கள் தமிழகத்தில் வகுப்புவாதத்திற்கு எதிரான போரை நிகழ்த்துகிறோம். நாங்கள் சமூக நீதி வெல்ல விரும்புகிறோம். இது சமூக நீதிக்கான போர்.” எனத் தெரிவித்துள்ளார்.