நியூஸ் 18 சேனலை முற்றிலும் புறக்கணிப்பதாக தமுமுக அறிவிப்பு!

Share this News:

சென்னை (20 ஜூலை 2020): நியூஸ் 18 சேனலை புறக்கணிப்பதாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் அறிவித்துள்ளது.

மதுரையை சேர்ந்த மரிதாஸ், சங்க பரிவார் அமைப்புகளுக்கு ஆதரவாக தொடரந்து பதிவிட்டு மத பிரச்சனைகளைக் கிளப்பக் கூடிய கருத்துகளை பரப்புவதையும் தன் ஆயுதமாக கொண்டுள்ளார்.

கூடவே ஊடகங்களை கீழ்த்தரமாக பேசுவதும் சில சேனல்களையும் அதில் பணியாற்றுவோர் குறித்தும் தனிப்பட்ட முறையில் தாக்கி அவதூறு பரப்புவதும் என்ற புதிய யுத்தியை இப்போது கையில் எடுத்துள்ளார்.

உலகமே அதிர்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் சாத்தான்குளம் விஷயத்தில் பம்மிக் கொண்டு ஒதுங்கிய இந்த மாரிதாஸை நோக்கி கேள்விகள் பாயவே, அதை திசை திருப்பும் விதமாக அவர் கையில் எடுத்த ஆயுதம் “ஊடகங்கள்”.. திமுகவுக்கு எல்லாரும் விலை போய்விட்டார்கள் என்ற வாதத்தை முன்வைத்து, நியூஸ் 18 குணசேகரன் முதல் குறி வைத்து குற்றஞ்சாட்டினார்.

மரிதாஸுக்கு எதிராக ஊடகங்கள் சட்டையைச் ழற்றும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்றும் எதிர் பாராமல் நியூஸ் 18 குணசேகரனை, நியூஸ் 18 சேனல் நீக்கம் செய்துள்ளது. இது பலரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

இந்நிலையில் “மனிதநேய மக்கள் கட்சி நியூஸ் 18 விவாதங்களில் பங்கு கொள்ளாது என்றும், பேட்டி அளிக்காது, அறிக்கை அனுப்பாது, வடம் வழியாகவும், டிஷ் வழியாகவும் எம் மக்கள் நியூஸ் 18 தமிழைக் காணச் சந்தா செலுத்தமாட்டார்கள் என்றும் ஜவாஹிருல்லா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


Share this News:

Leave a Reply