டாஸ்மாக் மூடல் – திறப்பதற்காக உச்ச நீதிமன்றத்தை நாட தமிழக அரசு முடிவு!

சென்னை (08 மே 2020): தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்ட உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் நேற்று முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.இதனால் பல இடங்களில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் போலீசார் தடியடி நடத்தினர். இதையடுத்து, ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மதுக்கடைகளை திறந்தது ஆபத்தானது எனவும், உயர் நீதிமன்றத்தின் விதிமுறைகள் மதுக்கடைகளில் பின்பற்றப்படவில்லை எனவும் கோரி மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், முடக்கம் முடியும் வரை அதாவது மே 17ஆம் தேதி வரை தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். அதுவரை ஆன்லைனில் மட்டுமே மதுபானங்களை விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இந்நிலையில், முழு முடக்கம் முடியும் வரை டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹாட் நியூஸ்:

ஈரானில் ஹிஜாப் கண்காணிப்பு பிரிவு கலைப்பு!

டெஹ்ரான் (05 டிச 2022): ஈரானில் ஹிஜாபுக்கு எதிராக பெண்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அந்நாட்டு அரசு ஹிஜாப் கண்காணிப்பு காவல் பிரிவைக் கலைத்துள்ளது. ஈரானில் வீட்டைவிட்டு வெளியில் செல்லும் 9...

குஜராத்தில் காங்கிரஸின் தோல்விக்கு காரணமான உவைசியும் ஆம் ஆத்மியும்!

அஹமதாபாத் (09 டிச 2022): ஆம் ஆத்மி கட்சியும் (ஏஏபி) மற்றும் அசாதுதீன் ஒவைசி தலைமையிலான ஏஐஎம்ஐஎம் கட்சியும் குஜராத்தில் சிறுபான்மையினரின் வாக்குகளை பிரித்து காங்கிரஸின் கனவை தகர்த்துள்ளது. குஜராத்தில் சிறுபான்மையினர், முதன்மையாக முஸ்லீம்கள்,...

இயக்குநர் ராம் கோபால் வர்மாவும் பிரபல நடிகையும் – படு ஆபாசமான பரபரப்பு வீடியோ!

ஐதராபாத் (08 டிச 2022); பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா, டேஞ்சரஸ் பட நடிகையான அப்சரா ராணியின் காலை பிடித்து படு ஆபாசமாக வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் ராம் கோபால்...