இதைத்தான் எதிர் பார்த்தோம் – திமுக அரசை கொண்டாடும் மக்கள்!

693

சென்னை (18 ஜுன் 2021): கொரொனா தொற்று குறையாத 11 மாவட்டங்களில் இலவச உணவு திட்டம் தொடரும் என்று தமிழ்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இப்போதுகூட கொரோனா தொற்று அதிகமாகிவிட்ட நிலையில், யார் கையிலும் காசு இல்லாத நிலையில், இந்த உணவு திட்டம் பேருதவியாகி கொண்டிருக்கிறது.. அதற்கான முன்னெடுப்பை திமுக அரசு கையில் எடுத்துள்ளது.. ஏற்கனவே ரேஷன் அட்டைகளுக்கு 4000 ரூபாய், மளிகை பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதேபோல, மற்றொருபக்கம் அறநிலைய துறை சார்பாகவும், கோயில்கள் மூலம் உணவு தயாரித்து அனைத்து ஆஸ்பத்திரிகளுக்கும் வழங்கப்பட்டு வருகின்றன.

ஆனால், தற்போது தமிழ்நாட்டில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.. இதில் 11 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு குறையாமல் உள்ளது.. அதனால், அந்த 11 மாவட்டங்களில் மட்டும் தளர்வுகள் அவ்வளவாக அறிவிக்கப்படவில்லை.. எனவே, இந்த 11 மாவட்டங்களில் இந்த இலவச உணவு திட்டம் இன்னமும் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமல்லாமல், அவர்களது சொந்தங்களுக்கும் சேர்த்து இந்த ஊரடங்கு நிறைவடையும் வரை அதாவது வரும் 21-ம்தேதி வரை இலவச உணவு வழங்கப்படும் என்று அறநிலையத்துறை அறிவித்துள்ளது.

இதைப் படிச்சீங்களா?:  தமிழகத்தில் சுழற்றி எடுக்கவுள்ள காற்றும் மழையும்!

கொங்கு மண்டலத்தில் தொற்று பாதிப்பு இன்னமும் உள்ளதால், அங்கெல்லாம் சிறப்பு நலத்திட்டங்கள் பல நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.. ஒருபக்கம் இலவச உணவு மற்றொரு பக்கம் அம்மா உணவகங்கள் என இரண்டும் சேர்ந்து மக்களை பசியாற்றி வருகின்றன..