கொரோனா வைரசுக்கு புதுவகை மருந்து – தமிழக அமைச்சரின் புதிய கண்டுபிடிப்பு!

596

சென்னை (13 ஜன 2021): கொரோனா வைரஸை ஒழிக்க தினமும் ரசம் குடிக்க வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில் “உங்கள் உணவில் தினமும் ரசம் மற்றும் சாம்பார் சேர்க்கவும். தினமும் குறைந்தது அரை கிளாஸ் அல்லது ஒரு கிளாஸ் ரசம் குடித்தால் . கொரோனா வைரஸ் இறந்துவிடும், அல்லது ஓடிவிடும். நான் ஒவ்வொரு நாளும் ரசம் குடிப்பேன். ”என்றார் ராஜேந்திர பாலாஜி.

மேலும் தமிழக உணவுகள் கோவிட்டை எதிர்த்துப் போராட உதவும் என்றார். மற்ற கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள்தான் கோவிடினால் இறக்கின்றனர். நாட்டின் பிற பகுதிகளுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் கோவிட் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம் நாம் உண்ணும் உணவுதான். மஞ்சள் நீரில் குளிப்போம். இஞ்சி, மிளகு மற்றும் பிற மசாலாப் பொருட்களை உணவில் சேர்த்துக்கொள்வோம் .” என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.