இஸ்லாமிய தலைவர்களுக்கு தலைமை செயலர் அழைப்பு!

513

சென்னை (13 மார்ச் 2020): குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக கலந்தாலோசிக்க இஸ்லாமிய தலைவர்களுக்கு தமிழக தலைமை செயலர் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அழைப்பில், “குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக பொது மக்களிடையே பல்வேறு ஐயாப்படுகள் உள்ளன. குறிப்பாக சிறுபான்மையினரிடம் இது தொடர்பாக கலந்தாலோசிக்கும் விதமாக வரும் 14 மார்ச் 2020 சனிக்கிழமை மாலை 4 மணி அளவில், தமிழக தலைமை செயலகம் பழைய கட்டடம் 2 வது தளத்தில் உள்ள கூட்டரங்கில் கலந்தாலோசிக்கும் விதமாக அனைத்து இஸ்லாமிய தலைவர்களும் கலந்து கொண்டு அவரவர்களின் கருத்துக்களை வைக்கலாம்”

இவ்வாறு தலைமை செயலர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.