பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் தக்காளி ரூ 85 முதல் 100 வரை விற்பனை!

436

சென்னை (24 நவ 2021): “பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் 85 முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும்” என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

வெளிச்சந்தையில் தற்போது, 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் தக்காளி, பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் 85 முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் என்றும், இதற்காக தினசரி 15 மெட்ரிக் டன் தக்காளி கொள்முதல் செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதைப் படிச்சீங்களா?:  தமிழக பாஜகவில் விரைவில் அதிரடி மாற்றங்கள் - கலக்கத்தில் பெரிய தலைகள்!

மேலும் பண்ணை பசுமை நுகர்வோர் காய்கறி கடைகள் மூலம் சென்னை, கோயம்புத்தூர், தூத்துக்குடி, மதுரை, திருவண்ணாமலை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருநெல்வேலி, திருப்பூர், சேலம், ஈரோடு, வேலூர் ஆகிய மாவட்டங்களில் தக்காளி உள்பட அனைத்து விதமான காய்கறிகளும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவத்தார்.