மேலக்காவேரியில் நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் விழா!

Share this News:

கும்பகோணம் (25 ஆக 2020): தஞ்சை மாவட்டம், கும்பகோணம், மேலக்காவேரி மிஸ்வா மற்றும் தஞ்சை சித்தர் அருட்குடில் இணைந்து 200 தென்னம்பிள்ளைகள் & பழமரக்கன்றுகள் நடும் விழா சிறப்பாக நடைபெற்றது.

நேற்று 24-08-2020,திங்கள் கிழமை காலை 10 மணி அளவில் மேலக்காவேரி பள்ளிக்கேணி குளக்கரையில் மேலக்காவேரி மிஸ்வா மற்றும் தஞ்சை சித்தர் அருட்குடில் இணைந்து 200 தென்னம்பிள்ளைகள் & பழமரக்கன்றுகள் நடும் விழா மேலக்காவேரி பள்ளிக்கேணி குளக்கரையில் சமூக இடைவெளியை கடைபிடித்து நடந்தேறியது..

நிகழ்ச்சியை பிரபல தொழிலதிபர் முகமது இஸ்மாயில் இறைவசனத்துடன் தொடங்கி வைக்க மேலக்காவேரி மிஸ்வா மு.அப்துல் அஜிஸ் வரவேற்புரையாற்றினார்.

சிறப்பு விருந்தினர்கள் சமூக ஆர்வலர், தஞ்சை சித்தர் அருட்குடில் திரு. ராஜ மதிவாணன், கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் செயற்குழு உறுப்பினர்கள் திரு.A.சண்முகவடிவேலன் திரு.ஹீலர்.J.C.வில்லியம் ஸ்டீபன்ஸன், R.கந்தசாமி மற்றும் பசுமை எட்வின், மரம் நடுவதின் அவசியத்தை எடுத்துரைத்து சிறப்புரையாற்றினர். மிஸ்வா சகோ.நஜிபுதீன் நன்றியுரையாற்றினார்.

மேலக்காவேரி இஸ்லாமிக் சோஷியல் வெல்ஃபேர் அசோஷியேஷன் அமைப்பினர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டும், மத நல்லிணக்கத்தை மேம்படுத்தும் வகையிலும் மேலக்காவேரி பள்ளிவாசல் சுற்றுபுறம் மற்றும் பள்ளிக்கேணி குளக்கரையை JCP இயந்திரத்தை கொண்டு தூய்மை செய்து குளக்கரையின் பிரதான பகுதி, கீழ குடியானத் தெரு திரௌபதி கோயில் வளாகம் மற்றும் ச.கருப்பூர் புனித அன்னம்மாள் தேவாலய வளாகத்தில் 200 மரக்கன்றுகளை அர்ப்பணிப்புடன் நட்டனர்.

இந்நிகழ்ச்சியில் கும்பகோணம் நகராட்சி தூய்மைப் பணியாளர்கள், ஊடகவியாளர்கள், மிஸ்வா உறுப்பினர்கள் மற்றும் அனைத்து சமுதாய சான்றோர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


Share this News:

Leave a Reply