அமைச்சர் செங்கோட்டையனுடன் உதயநிதி ஸ்டாலின் திடீர் சந்திப்பு!

சென்னை (20 மே 2020): கல்வி அமைச்சர் செங்கோட்டையனுடன் உதயநிதி ஸ்டாலின் சந்தித்துப் பேசினார்.

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தார். இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனுடன் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து பேசினார்.

சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டலின், “கொரோனா பாதிப்பு சீராகி இயல்புநிலை திரும்பும்போது 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்த வேண்டும். கல்வி முக்கியம், அதைப்போலத்தான் உயிரும் முக்கியம்.

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து 2,3 நாட்களில் நல்ல முடிவை அறிவிப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.” என்று உதயநிதி ஸ்டலின் தெரிவித்தார்.

ஹாட் நியூஸ்:

தீவிரமடையும் மாண்டஸ் புயல்!

சென்னை (09 டிச 2022): மாண்டஸ் புயல் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று இரவுக்கு பிறகு தீவிர புயலாக வலுப்பெற்றது. இது இன்று காலை வரை தீவிர புயலாக இருந்து, பின்னர் மீண்டும் புயலாக...

குஜராத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் பாஜக – கருத்துக்கணிப்புகள் வெளியீடு!

ஆமதாபாத் (05 டிச 2022): பாஜக தற்போது ஆண்டு வரும் மாநிலங்களான இமாச்சல் பிரதேசத்திலும், குஜராத்திலும் சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ளன. இமாச்சல் பிரதேசத்தில் கடந்த நவம்பர் மாதம் 12ந்தேதி ஒரே கட்டமாக...

நிர்வாணமாக்கி சித்ரவதை செய்யப்பட்டேன்: சிறை அனுபவங்கள் குறித்து டாக்டர் கஃபீல்கான்!

பெங்களூரு (06 டிச 2022): கோராக்பூர் சம்பவத்திற்குப் பிறகு சிறையில் அடைக்கப்பட்ட டாக்டர் கஃபீல்கான், தனது சிறை அனுபவங்கள் பகிர்ந்து கொண்டுள்ளார். பெங்களூரில் நடந்த எழுத்தறிவு விழா நிகழ்வின் போது, “கோரக்பூர் மருத்துவமனை சோகம்”...