சென்னை வண்ணாரப்பேட்டை போலீஸ் தாக்குதல் – வைகோ எச்சரிக்கை!

628

சென்னை (15 பிப் 2020): மதிமுகவின் உயர் மட்ட குழு கூட்டம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் இன்று சென்னையிலுள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் நடைப்பெற்றது.

அப்போது முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை,

இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் பாசிச கொள்கைகள் தொடர்ந்தால், தமிழகம் முழுவதும் தினந்தோறும் போராட்ட களத்தை சந்திக்க நேரிடும் என மதிமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

மேலும் குடியிரிமை திருத்த சட்டம், தேசியகுடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு உள்ளிட்ட சட்டங்களை திரும்ப பெற வேண்டும் .ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு மத்திய அரசு போட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ரத்து செய்திட நடவடிக்கை எடுக்கவேண்டும், நகர்புற உள்ளாட்சி மற்றும் 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் தேதியையை மாநில தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும். ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில். கட்சியின் பொதுசெயலாளர் வைகோ, அவை தலைவர் திருப்பூர் துரைசாமி, துணை பொதுசெயலாளர் மல்லை சத்யா, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.