கல்யாணராமன் மீது நடவடிக்கை – போலீஸில் புகார் அளித்த விசிக!

சென்னை (07 ஜூலை 2021): தொல். திருமாவளவன் குறித்து அவதூறு பரப்பி வரும் பாஜகவை சேர்ந்த கல்யாணராமன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி, சென்னை கமிஷனர் ஆபீசில் விசிக சார்பில் புகார் தரப்பட்டுள்ளது.

பாஜக கட்சியில் கல்யாணராமன் என்பவர், தொடர்ந்து வன்முறையைத் தூண்டி சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் பேசி, ஊடக வெளிச்சத்தில் எப்போதும் தன் பெயர் இருக்கும்படி சர்ச்சை செய்து வருபவர்.

சில மாதங்களுக்கு முன்பு, மேட்டுப்பாளையத்தில் முகமது நபி குறித்து தரக்குறைவாகப் பேசி, பல்வேறு தரப்பினரிடம் வாங்கி கட்டிக் கொண்டார். இதையடுத்து, போலீசாரும் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதைப் படிச்சீங்களா?:  உதய்ப்பூர் வன்செயல் - திருமாவளவன் கண்டனம்!

தற்போது திருமாவளவனின் குடும்பத்தை பற்றியும் இழிவாக சோஷியல் மீடியாவில் பேசி வருகிறார் என்பதால் அவர் மீது நடவடிக்கை வேண்டும் என்று சென்னை கமிஷனர் ஆபீசில் விசிக பொதுச்செயலாளர் வன்னியரசு புகார் அளித்துள்ளார்.

கல்யாணராமன் கருத்துக்களுக்கு எச் ராஜா போன்றோர் ஆதரவளித்து வருவது குறிப்பிடத்தக்கது.