முன்னாள் அமைச்சரின் வங்கி கணக்கு மற்றும் வங்கி லாக்கர்கள் முடக்கம்!

938

சென்னை (12 ஆக 2021): முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வாங்கிக் கணக்கு மற்றும் லாக்கர் முடக்கபப்ட்டுள்ளன.

சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் ரூ.811 கோடிக்கு டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றதாக அளித்த புகாரின்பேரில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்பட 7 பேர் மீதும், 10 நிறுவனங்கள் மீதும் ஊழல், மோசடி உள்ளிட்ட 7 பிரிவுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவருடைய சகோதரர்களான அன்பரசன், செந்தில்குமார், மற்றும் நெருக்கமான நண்பர்களான சந்திரசேகர், சந்திரபிரகாஷ், மைத்துனர் சண்முகராஜா ஆகியோரது வீடுகள் உள்பட 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தொடர்ந்து இரண்டு நாட்கள் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு கிடைத்த ஆவணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

இந்நிலையில்,முன்னாள் அமைச்சர் எஎஸ்.பி. வேலுமணியில் வங்கி கணக்குகள் மற்றும் வங்கி லாக்கர்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முடக்கியுள்ளனர். எஸ்.பி.வேலுமணியின் வீட்டில் நடத்திய சோதனையை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர்.