கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் என்ன செய்ய வேண்டும்?

Share this News:

சென்னை (26 ஆக 2020): கொரோனாவிலிருந்து மீண்டாலும் அதன் பக்க விளவுகளிருந்து மீள்வதற்கு சிலமாதங்கள் ஆகின்றன என்கின்றனர் கொரோனா பாதித்து மீண்டவர்கள்.

கொரோனா கிருமியானது உடலில் புகுந்து ரத்த அணுக்களில் கெட்டி தன்மையை ஏற்படுத்துவதால் நுரையீரலிலும் கெட்டி தன்மையும் ஏற்படுகின்றது. இதனால், கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்டு வீடு திரும்பினாலும் அதன் பாதிப்பு சில மாதங்களுக்கு தொடரும் என்கின்றனர் மருத்துவர்கள்.

கொரோனாவில் இருந்து விடுபட்டாலும் அடுத்த மூன்று மாதங்கள் தங்களை தொடர்கண்காணிப்பில் வைத்து கொள்ள வேண்டும் என்று சொல்லும் மருத்துவர்கள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் நுரையீரல் சீராகும் வரை படிபடியாக தங்கள் பணிகளை செய்யவேண்டும் என்கின்றனர்.

வெது வெதுப்பான சுடுநீர் குடித்தல், புரத சத்து அதிகம் உள்ள உணவு பொருட்களை எடுத்து கொள்ளுதல் காய்கறி, கீரை வகைகளை எடுத்துக் கொள்வதாலும் விரைவாக அத்தகைய நிலையில் இருந்து மீளலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

மீண்டும் தங்களை கொரோனா தாக்குமோ என்ற அச்சத்தில் பலருக்கு மன அழுத்தம் ஏற்படுவதாக சொல்லும் மருத்துவர்கள் கொரோனா நோய் பாதித்தவருக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்படுவது பதிவாகுவது இல்லை என்றும் மூச்சு பயிற்சி மற்றும் அளவான உணவு முறைகள் கண்டிப்பாக தங்களை இயல்பு நிலைக்கு மீட்டு கொண்டு வரும் என்கின்றனர்.


Share this News:

Leave a Reply