ஊரடங்கில் பெண் போலீசின் தில்லாலங்கடி வேலை!

688

சீர்காழி (19 ஏப் 2020): ஊரடங்கிலும் ரோந்துப் பணியில் ஈடுபட்ட பெண் போலீஸ் ஒருவர் லஞ்சம் வாங்கியதால் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சீர்காழி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஸ்ரீபிரியா என்பவர் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். ஊரடங்கின் போது அவ்வப்போது ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது தனது கணவர் சோமசுந்தரரை அழைத்துக் கொண்டு சீர்காழி தென் பாதி பகுதிகளில் உள்ள மளிகை கடைகளில் மாமூல் வசூல் செய்துள்ளார்.

மேலும் தனது காவல் எல்லையைத் தாண்டி திருவெண்காடு பகுதியில் உள்ள மருந்து கடை ஒன்றில் ரூ.2,000 வசூலித்துள்ளார். இதுபற்றி தகவலறிந்த பொதுமக்கள் காவல் ஆய்வாளர் ஸ்ரீபிரியா செய்த முறைகேடுகள் பற்றி சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

இது தஞ்சாவூர் சரக டிஐஜி லோகநாதனின் கவனித்திற்குச் சென்றது. உடனே உரிய விசாரணை மேற்கொண்டு ஸ்ரீபிரியாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இதுபோன்ற செயல்களில் போலீசார் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.