அழகாய் இல்லாததால் கணவன் துன்புறுத்தல் – புது மணப்பெண் தற்கொலை

496

நாகர்கோவில் (29 ஜன 2020): அழகாக இல்லாததை காரணம் காட்டி கணவன் துன்புறுத்தியதால் மனம் உடைந்த பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாகர்கோவில் அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகா்கோவில் காற்றாடித்தட்டையை சோ்ந்த அா்சனா (24) சிறு வயதிலேயே தாயை இழந்தவர். அதே பகுதியை சோ்ந்த சிவனை பல கனவுகளோடு கரம் பிடித்தார். திருமணமாகி 7 மாதங்கள் மட்டுமே ஆகியுள்ளது. இந்நிலையில்தான் அர்ச்சனா தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து அர்ச்சனாவின் தந்தை பொன்னு முத்து கூறும்போது, மூன்று பெண் குழந்தைகளில் மூன்றாவது தான் அா்சனா. தாய் இல்லாத குறையை காட்டாமல் தாயாகவும் தந்தையாகவும் மூன்று பேரையும் வளா்த்தேன். மகளை விருப்பபட்டு பெற்றோர்களின் சம்மதத்துடன் தான் சிவன் திருமணம் செய்தான். இரண்டு மாதம் சந்தோஷமாக இருந்த அவா்கள் அதன்பிறகு கணவனுக்கும் மாமியாருக்கும் தன்னை பிடிக்கவில்லையென்றும் நான் ஒல்லியாக அழகு இல்லாமல் இருக்கிறேன் என குற்றம் சொல்லி தினமும் கணவா் சண்டை போடுவதாக என்னிடம் சொல்லுவாள்.

இதைப் படிச்சீங்களா?:  திசைமாறும் திருமாவளவன் - கலக்கத்தில் திமுக!

இதனால் மகள் குண்டாக அக்கம் பக்கத்தினா் சொல்வதையெல்லாம் கேட்டு அதை வாங்கி சாப்பிட்டு வந்தாள். அதன் பிறகு சுவையாக சமையல் செய்யவில்லை என்று அதையும் குற்றம்சொல்லி அவளை அடிக்கடி அடிப்பதால் தினமும் நிம்மதி இல்லாமல் மனவேதனையில் இருந்து வந்தாள். இந்தநிலையில் தான் அவள் தற்கொலை செய்து இருக்கிறாள். அது கொலையாக கூட இருக்கலாம் என்ற சந்தேகமும் உள்ளது. இதனால் என் மகளின் மரணத்துக்கு நியாயம் கிடைக்க வேண்டும் அதற்கு காரணமானவா்களுக்கு உடனடி தண்டனையும் கொடுக்க வேண்டும் என்றார்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.