மீண்டும் வருகிறார் ஜல்லிக்கட்டு மற்றும் பிக்பாஸ் ஜூலி!

August 25, 2017
பகிருங்கள்:

சென்னை(25 ஆகஸ்ட் 2017): விஜய் டிவியில் Kings of Comedy Juniors நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக ஜல்லிக்கட்டு ஜூலி கலந்துகொள்கிறார்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமான ஜூலியானா, விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஜல்லிக்கட்டின் மூலம் கிடைத்த வீரதமிழச்சி என்ற பெயரை பெருமளவில் கெடுத்துக்கொண்டு வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் ஜூலி இப்போது விஜய் டி.வி-யின் Kings of Comedy Juniors என்ற குழந்தைகளுக்கான காமெடி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார்.

இதன்மூலம் அவர் மீது பரப்பப்பட்ட பல்வேறு வதந்திகளுக்கு ஜூலி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!