ஜல்லிக்கட்டு ஜூலியை வைத்து ஆட்சியாளர்களை சாடிய கமல்!

August 28, 2017
பகிருங்கள்:

சென்னை(28 ஆகஸ்ட் 2017): பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதன் பங்கேற்பாளர்களில் ஒருவரான ஜல்லிக்கட்டு ஜூலியை பயன்படுத்தி அரசியல்வாதிகளை கடுமையாக சாடினார்.

பிக்பாஸ் என்னும் ரியாலிட்டி நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்குகிறார். இதில் பங்கேற்ற ஜல்லிக்கட்டு ஜூலி, பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும்போது பொய் ஒன்றை கூறினார். அது பொதுமகளை முகம் சுழிக்க வைத்ததோடு, சமூக வலைதளங்களில் ஜூலியை கடுமையாக சாடி பதிவிட்டிருந்தனர்.

இந்நிலையில் நேற்றைய நிகழ்ச்சிக்கு மீண்டும் வந்திருந்த ஜூலியிடம் பொதுமக்கள் வெறுப்புக்கு, ஜூலி செய்த தவறு என்ன என்று கேட்டபோது அவர் சொன்ன அந்த ஒரு பொய்யை காரணமாக காட்டினார்.

இதனை தொடர்ந்து பார்வையாளர்களை பார்த்து ஆவேசமான கமல், இவர் சிறு பொய்தான் சொன்னார் ஆனால் அவர் மீது இத்தனை கோபத்தை காட்டிய மக்கள் ஏன் ஆட்சியாளர்கள் பல பொய் சொல்கிறார்களே, குண்டர்கள் ஆட்சி புரிகிறார்களே அவர்களிடமும் அந்த கோபத்தை காட்டவில்லை என்றார்.

மேலும் இந்த கோபம் தொடர வேண்டும். இந்த கோபத்தை ஆட்சியாளர்கள் தவறு செய்யும்போது காட்ட வேண்டும். அதற்கான நேரம் வரும்போது அதனை செய்ய வேண்டும்.' என்றார்.

தற்போது வாசிக்கப்படுபவை!