டி.வி தொகுப்பாளர் மணிமேகலைக்கு என்னாச்சு?

December 02, 2017
பகிருங்கள்:

சென்னை (02 டிச 2017): பிரபல டி.வி. தொகுப்பாளர் மணிமேகலை அவரது வீட்டினரால் தாக்கப்பட்டதாக வெளியான செய்தி உண்மையில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

மணிமேகலை ஒருவரை காதலித்து வருவதாகவும் அதற்கு அவரது வீட்டில் எதிர்ப்பு தெரிவித்து மணிமேகலையை தாக்கியதாகவும் கூறப்பட்டது.

இதனை மறுத்துள்ள மணிமேகலை,"நான் காதலித்து வருவது உண்மைதான். அதற்கு என் வீட்டில் எதிர்ப்பு இருக்கிறது அது சரியாகும் என நினைக்கிறேன்.

ஆனால் என்னை யாரும் தாக்கவில்லை அது தவறான செய்தியாகும்" என்றார்.

தற்போது வாசிக்கப்படுபவை!