தமிழில் இன்னொரு சீரழிவு தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ!

பிப்ரவரி 21, 2018 2012

சென்னை(21 பிப் 2018): தமிழில் விரைவில் வெளிவரவுள்ளது ''எங்கள் வீட்டு மாப்பிள்ளை' என்ற ரியாலிட்டி ஷோ.

ரியாலிட்டி ஷோ என்ற பெயரில் பல நிகழ்ச்சிகள் பொதுமக்களை குறிப்பாக இளசுகளை சீரழிக்கும் நிகழ்ச்சிகளே அதிகம் இடம் பிடிக்கின்றன. அந்த வரிசையில் தமிழில் புதிதாக அறிமுகமாகியுள்ள கலர்ஸ் தொலைக்காட்சியில் நடிகர் ஆர்யாவின் எங்கள் வீட்டு மாப்பிள்ளை என்ற ரியாலிட்டி ஷோ வெளிவரவுள்ளது.

இந்நிகழ்ச்சி ஆர்யா தன் வாழ்க்கை துணையை தேடும் இடமாக அந்த நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த தொலைக்காட்சியின் தமிழ் விளம்பர தூதராகவும் ஆர்யா தேர்வுசெய்யப்பட்டுள்ளார். நிகழ்ச்சியின் இறுதியில் நடிகர் ஆர்யா தன் வாழ்க்கை துணையை தேர்தெடுப்பார் என அறிவித்துள்ளது. இதற்காக அந்த நிகழ்ச்சியில் பங்குகொள்ள கிட்டத்தட்ட 7000 பெண்கள் விண்ணப்பித்துள்ளனர் அதிலிருந்து 16 பெண்களை தேர்வுசெய்து நிகழ்ச்சியை தொடங்கவிருக்கிறது கலர்ஸ் தமிழ்.

ஏற்கனவே கலாச்சார சீரழிவுக்கு வழிவகுத்த பிக்பாஸ் நிகழ்சியைப் போன்று இதுவும் ஏதேனும் சர்ச்சையை ஏற்படுத்தக்கூடும் என கருதப்படுகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...