பிக பாஸ் 2 வில் அரங்கேறும் அசிங்கங்கள்!

ஜூன் 22, 2018 1646

சென்னை (22 ஜூன் 2018): பிக்பாஸ் சீசன் 1 நன்கு புகழடைந்ததை தொடர்ந்து பிக்பாஸ் 2 தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சென்ற சீசனை விட அசிங்கங்கள் அதிகம் அரங்கேறி வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.

வெளி நாடுகளிலும் இந்தியிலும் புகழ் பெற்ற ரியாலிட்டி ஷோ வான பிக்பாஸ் தமிழிலும் சென்ற ஆண்டு தொடங்கப் பட்டது. இந்நிலையில் தமிழில் பிக்பாஸ் சீசன் 2 சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஆரம்பம் முதலே பல்வேறு சர்ச்சைகள், மோதல்கள், அழுகைகள் என பல தரப்பட்ட பிரச்னைகள் நிலவி வருகின்றன. இது ஒருபுறம் என்றால் சில குறிப்பிட்ட போட்டியாளர்கள் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என குதுகலத்துடன் நாட்களை கடத்தி வருகின்றனர்.

குறிப்பாக ஐஸ்வர்யா தத்தா, யாஷிகா ஆனந்த், மகத், ஷாரிக் ஹாசன் உள்ளிட்டோர் சிறப்பாக தங்களின் நாட்களை ஜாலியாக கடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் நீச்சல் குளத்தில் ஜாலியாக பொழுதை கழிக்கும் போட்டியாளர்கள், சில போட்டிகளிலும் தீவிரமாக பங்கேற்று வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...