பிக் பாஸில் மஹத் பெண் போட்டியாளர்களுடன் அரங்கேற்றும் அசிங்கங்கள்!

ஜூலை 04, 2018 802

விஜய் டிவியில் தொடங்கப் பட்டிருக்கும் பிக்பாஸ் இரண்டாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவரான மஹத் பெண் போட்டியாளர்களுடன் செய்யும் அசிங்கங்கள் பலரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது.

பிக்பாஸ் குறித்து சமூக சீர்கேடு என்பன போன்ற விமர்சனங்கள் ஒரு புறம் இருந்தாலும், இதில் அரங்கேறும் அசிங்கள் அதனை உறுதி செய்கின்றன.

குறிப்பாக முந்தய சீசனை விட இப்போதைய சீசனில் மஹத், நடிகை யாசிகா மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகியோருடன் அடிக்கும் லூட்டி சகிக்கவில்லை. சில நேரங்களில் எல்லை மீறி செயல்படுவது பார்வையாளர்கள் மட்டுமல்ல, போட்டியாளர்களையே முகம் சுழிக்க வைக்கிறது.

குறிப்பாக நடிகை மும்தாஜ் இதுகுறித்து அவரிடம் எச்சரிக்கை விடுத்த நிலையில் மஹத் மும்தாஜுக்கு எதிராக திரும்பியுள்ளார். சில நேரங்களில் மும்தாஜையும் அவர் அசிங்கமாக பேசுவதும் தொடர்கிறது.

வரும் வாரத்தில் கமல் மஹத்திடம் இதுகுறித்து கண்டிப்பாக பேசுவார் என பார்வையாளர்கள் எதிர் பார்க்கின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...