தாடி பாலாஜி இனி பீப் பாலாஜி என அழைக்கப் படலாம்!

ஜூலை 06, 2018 812

சென்னை (06 ஜூலை 2018): விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜி தொடர்ந்து பீப் வார்த்தைகளைப் பேசி வருகிறமை பிக் பாஸ் ரசிகர்களை கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது.

மூன்றாவது வாரத்தில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைஷ்ணவி, அந்த வீட்டின் தலைவராகியதிலிருந்தே வீட்டினுள் நடக்கும் சண்டைகள் வேறு கோணத்திற்கு திரும்பியுள்ளன. கடந்த 2 வாரங்களில் பாலாஜி மற்றும் அவரது மனைவி நித்யாவிற்கிடையே இருந்த பிரச்னைகளுக்கு கமல்ஹாசன் முற்றுப்புள்ளி வைத்தார். அப்போது பாலாஜி தனது மனைவியை தகாத வார்த்தைகளால் திட்டியதை கமல்ஹாசன் கண்டித்து எச்சரித்தார். இதையடுத்து பாலாஜி - நித்யாவின் நடவடிக்கைகளில் மாற்றம் தென்பட்டன.

இந்நிலையில் இன்று ஒளிபரப்பாகவுள்ள நிகழ்ச்சியின் புரமோ வீடியோவை நிகழ்ச்சிக் குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில் வீட்டின் தலைவராக இருக்கும் வைஷ்ணவி சக பங்கேற்பாளார்களிடம் தலைமைக்கான தொனியில் பேசியுள்ளார். அப்போது பாலாஜியின் மனைவியை கண்டிப்பதுபோல் தெரிகிறது. இதைக்கேட்கும் பாலாஜி கோபமாக வைஷ்ணவியிடம் பீப் வார்த்தைகளை உபயோகிக்கிறார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...